வெற்றிப் பயணம் மேற்கொள்ளும் ஜீவன்யாவை சந்திப்போம் வாருங்கள்!
"நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்! ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை!"
என்பதை கருத்தில் கொண்டு நேரத்தை கருத்தாக பயன்படுத்தி வருகிறார் ஜீவன்யா. படிக்கும் காலத்தில் கற்றுக்கொண்ட இவர், கோவிட் வேளையில் வீட்டிலேயே பட்டு நூல் ஆபரணங்கள், களிமண் கொண்டு செயின், காதணி போன்றவை தயாரித்து விற்பனை செய்து தனக்கும் வீட்டிற்கும் பயனளிக்கும் வகையில் வாழ்ந்து கொண்டு வருகிறார் ஜீவன்யா.
இண்ஸ்டா போன்ற இணைய வலைத் தளங்களில் தனது தயாரிப்புகளை சந்தைப் படுத்தி வரும் ஜீவன்யா நேரடியாக கடைகள், பார்லர்கள் மூலமாகவும் விற்பனை செய்து கொண்டு வருகிறார். இத்தொழிலை ஆரம்பித்து ஒன்றரை வருடங்களே ஆன நிலையிலும் திருமணம் போன்ற விழாக்களுக்கு ஆபரணங்கள் செய்து தருவது என்று வளர்ந்து கொண்டு வருகிறார்.
"ஆபரணங்களை விரும்பாத பெண்டிர் தான் உள்ளனரோ!"
ஆபரணங்களை விரும்பும் அனைத்து பெண்களுக்கும் இவரின் தயாரிப்புகள் கண்டிப்பாக பிடிக்கும். களிமண்ணால் செய்யும் ஆபரணங்கள் உடையும் அபாயம் கொண்டதால் அதனை கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கையிடும் ஜீவன்யா மற்ற பொருள்களுக்கு நல்ல வாழ் நாள் உள்ளது என்று கூறுகிறார். தரமான மூலப்பொருள் கொண்டு செய்வதால் தரத்தில் எவ்வித பிரச்சினையும் வராது என்றும் கூறுகிறார்.
பலவிதமான டிசைன்களில் இவர் தயாரிக்கும் பொருளுக்கு நல்ல வரவேற்பும் மக்களிடையே உள்ளது. இத்தொழிலை மேலும் விரிவடைய செய்யும் நோக்கத்தில் முயற்சி கொண்டு உழைத்து வருகிறார் ஜீவன்யா.