மாற்றத்தை உருவாக்கு, அது சவாலால் மட்டுமே கிட்டும்!
மாற்றத்தை உருவாக்கு, அது சவாலால் மட்டுமே கிட்டும்! - கமிஸ் ஆரோக்கிய உணவுகள்.
" நீ தேர்ந்தெடுக்கும் உணவு அதற்கான மாற்றத்தை உருவாக்கும்". - மைக்கில் கிரிகர்.
ஜாஹிர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆர்வமுள்ள தொழிலதிபர் ஆவார். இவர் சிறுதானிய வகைகளையும் சேர்த்து மொத்தம் 12 வகையான லட்டுகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இதோடு காம்ப்ளான், ஹார்லிக்ஸ், பூஸ்ட்க்கு மாற்றாக பீட்ரூட் மால்ட் செய்து விற்பனை செய்கிறார். அதேபோன்று, நெய் ரோஸ்ட் செய்யப்பட்ட ராகி பவுடரும் செய்து விற்பனை செய்து வருகிறார். இதனை அப்படியே உட்கொள்ளலாம் என்றும் குறிப்பிடுகிறார். ஜாஹிர் அவருடைய எந்த தயாரிப்புகளிலும் வெள்ளை சர்க்கரையோ அல்லது செயற்கை கலரூட்டிகளோ அல்லது கெட்டுப்போகாமல் பதப்படுத்தும் முறையோ என்று உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த பொருளையும் அவர் சேர்ப்பது இல்லை என்பது கூடுதல் சிறப்பு.
இவர் தொழில் தொடங்குவதற்கு மூல காரணமாக அமைந்தது, தன் மகனுக்கு ஆரோக்கியமான உணவு கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே. சந்தைக்கு சத்துள்ள உணவுகள் வாங்க வேண்டும் என்று சென்ற இவருக்கு, சந்தையில் எண்ணெய் பண்டங்களுடன் ஒப்பிடும்போது ஆரோக்கியமான உணவுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. ஆரோக்கிய உணவுகளை வாங்க முற்பட்ட போதும், அவ்வுணவுகளின் விலை அதிகமானதாகவும் மற்றும் அதனை அன்றாடம் வாங்குவதிலும் சிரமம் ஏற்பட்டது. இதுவே, அவருக்கு சொந்த தொழில் – ‘ கமிஸ் ஆரோக்கிய உணவுகள்’ தொடங்குவதற்கு வழிவகுத்தது.
ஜாஹிர் தனது தயாரிப்பு பொருட்களை சமூக ஊடக தளங்களிலோ அல்லது டிஜிட்டல் தளங்களிலோ விற்பனை செய்வதற்கு எந்த ஆலோசனையும் வழியும் இல்லாததால், அவரால் இத்தொழிலில் மேலும் வளரமுடியவில்லை என்பதையும் ஜாஹிர் உணர்ந்தார். ஜாஹிர் தனது தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு செல்லாததற்கும், மக்கள் இதன் பயனை பெற முடியாமல் போனதற்கும் இதுவே காரணமாக அமைந்தது. ஆனால் தற்போது, ஜாஹிர் தனது தயாரிப்புகளை முழுவீச்சுடன் மக்களுக்கு நேரடியாக வழங்கவும் மற்றும் அந்த ஆரோக்கியம் நிறைந்த பொருட்களை சமூகத்திற்கு கொண்டு செல்லவும் முயற்சித்து வருகிறார்.
தினை வகைகள் - உடல் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த தகவல்கள்:
தினை உலகம் முழுவதும் தானிய பயிர்களாகவும்/தானியங்களாகவும் பரவலாக வளர்க்கப்பட்டு வருகிறது. தினை சிறுதானிய வகைகளில் ஒன்று. தினை அளவில் சிறியதாகவும், வட்ட வடிவிலும் மற்றும் வெள்ளை, சாம்பல், மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம் கொண்டதாகவும் விளங்குகிறது. தினை ஊட்டச்சத்து மிகுந்தது. ஒவ்வொரு சிறுதானியமும் அரிசி மற்றும் கோதுமையை விட மூன்று முதல் ஐந்து மடங்கு ஊட்டச்சத்தும் புரதங்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின் பி, கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம் மிக்கது. இது பசயம் அற்றது மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. ஆகையால் இவ்வகை தானியங்கள் ஒவ்வாமை உள்ள மக்களுக்கும் மற்றும் கோதுமை சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கும் ஏற்ற உணவாக அமைகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் மற்றும் எடை குறைப்புக்கும் இவ்வகை சிறுதானியங்கள் சிறந்த தேர்வாக அமைகிறது.
தினை - உடல் நன்மைகள்:
•தினைகள் வைட்டமின் பி, கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம் மிக்கது. மற்றும் பசயம் இல்லாதவை.
• நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது மற்றும் இருதய நோய் அபாயத்தை குறைக்கிறது.
• தினைகள் மாவுச்சத்து மிகுந்தது. அதிக ஆற்றல் தரும் உணவாக விளங்குகிறது. மற்றும் இவை நார்ச்சத்து நிறைந்தது.
• தினைகள் பெரும்பாலும் பூச்சிகள் அற்றது மற்றும் குறைந்த உரம் கொண்டே வளர்க்கப்படுகிறது
ஆரோக்கியம் உங்கள் முதலீடு, செலவு அல்ல!
ஜாஹிர் ஆரோக்கியமான பயணத்தை நோக்கி அடி எடுத்து வைத்துள்ளார். இது சமூகத்தில் மக்களின் நலன் கருதி தொடங்கப்பட்டது ஆகும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கான பயணத்திலோ அல்லது உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்திலோ நீங்கள் இருந்தால், எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாறாக ஆரோக்கியம் தரும் உணவுகளை உட்கொண்டு நன்முறையில் வாழலாம். உடல் எடை குறைப்புக்கு உதவாத உணவுகள் இந்த சிறுதானியங்களைக் கொண்டு மாற்றம் செய்யலாம்.
அவர் மேலும் கூறுகையில், அரிசி மற்றும் கோதுமைக்கு பதிலாக, தினை போன்ற நன்மை தரும் உணவுகளை உட்கொள்ளலாம். தினையின் வகைகளையும் அதன் நன்மைகளையும் இன்றைய சூழ்நிலையில் அறிந்ததன் விளைவாக, எதிர்காலத்தில் நாம் அனைவரும் சிறந்த வாழ்கையை உருவாக்க இது வழிவகுக்கும். இறுதியாக அவர் கூறுவது என்னவென்றால், சிறந்த மருத்துவர்களைவிட சிறந்த தானியத்தை தேர்ந்தெடுப்பது ஒவ்வொருவரின் விருப்பம் என்று கூறி முடித்தார்.