“கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்.”
நலினி ஆரம்பத்தில் மாணவர் பயிற்சி மையத்தில் ஆசிரியையாக பணி புரிந்தவர். நேரத்தை நல்வழியில் செலவழிக்கவே அங்கு பணிபுரிந்து வந்தவர், கொரோனா அலை பல மக்களின் வேலையை பாதித்ததுபோலவே,இவர் பணியிலிருந்து நின்றதற்கும் காரணம் ஆகிவிட்டது. கெட்டதிலும் நன்மை இருக்கும் என்று சொல்வார்களே, அதுபோல இந்த கஷ்டமும் நந்தினியின் பல்செயல்திறனை வெளிக்கொண்டு வந்தது. தனது வீட்டிலே டெரக்கோட்டா ஆபரணங்கள் செய்யும் தொழிலை ஆரம்பித்தார்.
அவர் இத்தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கு அரும்பாடுபட்டு உழைக்கிறார். சமூக ஊடக வலைத்தளங்களில் தனது தயாரிப்புகளை படங்களாக எடுத்து அதனை அனைவருக்கும் தெரிய வைக்க வேண்டும் என்றும் முயற்சிகள் எடுத்து வருகிறார். தனக்கு தெரிந்தவர்கள், தோழர்-தோழிகள், சகோதர-சகோதரிகள், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆகியோரின் அங்கீகாரம் பெற்றதோடு, இவரின் முயற்சிக்காகவும் கடுமையான உழைப்புக்காகவும் நற்பெயரும் பாராட்டும் பெற்றுள்ளார்.