பஞ்சு நூல் கொண்டு பாரம்பரிய நூல் புடவை !
பஞ்சு நூல் கொண்டு பாரம்பரிய நூல் புடவை ! - நூல்சேலை விற்பனையில் ராமச்சந்திரன்!
"ஆள்பாதி ஆடைபாதி" என்ற பழமொழி உண்டு.”
ராமச்சந்திரன் சொந்த உற்பத்தியில் நடைபெறும் நூல் சேலை நய்யப்படும் இடம் முப்பதுக்கும் மேலான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து பசியாற்றி வருகிறது. தாங்கள் பரம்பரை பரம்பரையாக செய்யும் இந்த தொழிலில் பாரம்பரியமும் கலந்து இருப்பதாக கூறுகிறார் ராமசந்திரன். காட்டன், பாலி காட்டன் முதலியவற்றை தயாரித்து விற்பனை செய்யும் ராமச்சந்திரன் தயாரிப்பின் தரத்தில் மீது மிகுந்த கவனம் செலுத்துவதாக குறிப்பிடுகின்றார். நீண்ட காலம் உழைக்கும் தரமான தயாரிப்பாக விளங்குகிறது, ராமச்சந்திரன் தயாரிக்கும் நூல் சேலைகள்.
நெசவுக்கலை:
வேட்டி, புடவை அல்லது துண்டு போன்ற உடைகளைத் தயாரிக்கும் கலை, நெசவுக்கலை. உருவாக்கும்போது இருக்கும் சந்தோஷம் அதை அணியும் வாடிக்கையாளர்களிடமும் இருக்க வேண்டும் என்ற என்னத்தை எண்ணிக் கொண்டே இருப்பதால் இதனை வேலையாக மட்டும் செய்யாமல் கலையாக பார்க்கிறேன் என்கிறார் ராமச்சந்திரன்.
"ஆடையுடையான் அவைக்கஞ்சான்"
"ஆடையில்லா மனிதன் அரை மனிதன்".
தட்ப வெப்ப நிலைகள் உடம்பைத் தாக்காத வண்ணம் ஆடை பாதுகாத்து வந்தது. நமது கலைச் சிறப்பையும் நுண்ணறிவையும் காட்டி வந்தது. “ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மொகஞ்சதாரோவில் காணப்படும் அழகிய ஆடைகளைக் கொண்டு, நெய்தற்கலை மிகத்தொன்மையான காலத்திலே அரும்பி மிகச்சீரும் சிறப்புமாய் வளர்ந்துள்ளது” என்று திட்டவட்டமாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
நூல் சேலையின் பயன்:
•வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
•நம் நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப இவ்வாடைகள் உருவாக்கப்படுகின்றன.
•உடல் வேர்வையை உரிந்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
சமூக வலைத்தளங்களலோ இணையத்திலோ தனது தயாரிப்புகளை விற்பனை செய்வதில்லை என்று கூறும் ராமச்சந்திரன், இதுவரை வியாபாரிகளுக்கு மட்டுமே விற்பனை செய்து வருகிறார். இவரின் உழைப்புக்கு அங்கீகாரம் இவரின் தயாரிப்பின் தரமே ஆகும்.
“நூல் ஆடைகள் உடுத்துவோம்; நெசவாளர்களை காப்போம்”.
“நூல் ஆடைகள் உடுத்துவோம்; நெசவாளர்களை காப்போம்”.